யானை தந்தம் பறிமுதல் 3 பேர் கைது

தாண்டிக்குடி:திண்டுக்கல்மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இந்த மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் யானை தந்தத்தை விற்க முற்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் தாண்டிக்குடி மங்களம்கொம்பையைச் சேர்ந்த சுருளிவேல் 38, பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 44, தாண்டிக்குடி பட்லங்காட்டை சேர்ந்த பாஸ்கரன் 23, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர். எங்கு வாங்கினர், யாருக்கு விற்க இருந்தனர் என விசாரணை நடக்கிறது.

Advertisement