குன்றத்து கோயிலில் ஆடி மாத விழாக்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிமாதவிழாக்களை வெளியிட்டுள்ளனர்.

ஆடி 3ல் (ஜூலை 19) ஆடிப்பரணி, ஆடி 4 (ஜூலை 20) கார்த்திகை, ஆடி 6 (ஜூலை 22) பிரதோஷம், ஆடி 8 (ஜூலை 24) அமாவாசை, ஆடி 12 (ஜூலை 28) ஆடிப்பூரம், ஆடி 16 (ஆக. 1) சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. ஆடி 21 (ஆக. 6) பிரதோஷம், ஆடி 23 (ஆக. 8) பவுர்ணமி, ஆடி 30 (ஆக. 15) 1008 விளக்கு பூஜை, ஆடி 31 (ஆக. 16) கார்த்திகை, கோகுலாஷ்டமி நடக்கிறது.

திருப்பரங்குன்றம் பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் ஆடியின் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களுடன், பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்படும். இன்று வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடக்கிறது.

Advertisement