போலீஸ் செய்திகள்...
வேன் மோதி ஒருவர் பலி
கள்ளிக்குடி: பேய்குளத்தைச் சேர்ந்த அழகு சுந்தரம் மகன் பாலமுரளிகிருஷ்ணன் 20, இவர், தாத்தா சண்முகராஜாவை ஆவலசுரம்பட்டியில் விட்டுவிட்டு, டூவீலரில் வந்துள்ளார். அந்த வழியாக வந்த உறவினர் தவசிப் பெருமாளை டூவீலரில் ஏற்றிச் சென்றார். உன்னிப்பட்டி ஊருணி அருகே எதிரே வந்த மினி வேன் டூவீலரில் மோதியது. பாலமுரளிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தவசிப்பெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
பிளஸ் 2 மாணவர் பலி
சேடப்பட்டி: முனிசாமி மகன் சின்னன் என்ற விஷால் 17. முருகன் மகன் ராமர் 17. சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தனர். இருவரும் மங்கல்ரேவு உணவகத்திற்கு சென்று திரும்பினர். டூவீலரை சின்னன் என்ற விஷால் ஓட்டினார். ராமர் பின்பக்கம் அமர்ந்திருந்தார் (ஹெல்மெட் அணியவில்லை) சேடபட்டிக்கு வந்தபோது, எதிரே டூவீலரில் வந்த கே. ஆண்டிபட்டி கதிர்வேல் 26, மோதினார். இதில் ராமர் இறந்தார். சின்னன் என்ற விஷால், கதிர்வேல் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சேடப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
கொட்டாம்பட்டி: கடலுார் சகாயத்துக்கு சொந்தமான படகை கன்னியாகுமரியை சேர்ந்த 7 பேர் வேனில் ஏற்றி சொந்த ஊருக்கு சென்றனர். வேனை கன்னியாகுமரி ஜெகன் 48, ஓட்டினார். நேற்று மாலை கோட்டைப்பட்டி விலக்கருகே முன்னால் சென்ற டூவீலர் மீது மோதியதில் டிரைவர் வேனை திருப்பினார். இதில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் பயணித்த கடியாபட்டினம் ஸ்டாலின் 48, இறந்தார். சகாயம், ரொனால்டோ 45, சகாயம் ஆண்டனி 47, உள்ளிட்ட நால்வர் காயத்துடன் மேலுார், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.
--- மணல் திருடிய நால்வர் கைது
பேரையூர்: தொட்டணம்பட்டி செல்வம் 29. வி.ராமசாமிபுரம் சதுரகிரி 35. பெரியவண்டாரி முத்தரசன் 18. விருதுநகர் மாவட்டம் வத்ராப் முத்தழகன் 18, ஆகிய 4 பேர் எஸ்.மீனாட்சிபுரம் ஓடையில் மணல் திருடினர். ரோந்து சென்ற நாகையாபுரம் போலீசார் அவர்களை கைது செய்து மணல் அள்ளும் இயந்திரம், 2 டிப்பர் லாரிகள், 3 டூ வீலர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.--
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!