வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா

மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்புக் குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் செல்லமே செல்லம் நிகழ்ச்சி, சொக்கிகுளம் லேடி டோக் கல்லூரியில் வருகிற 20ம் தேதி(ஞாயிறு) நடக்கிறது.

மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் லேடி டோக் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. ரோட்டரி ஆளுநர் ஜெ.கார்த்திக் தலைமை வகித்து, பரிசுகளை வழங்குகிறார். போக்குவரத்து காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா, லேடி டோக் கல்லூரி முதல்வர் முனைவர் பியூலா ஜெயஸ்ரீ, ரோட்டரி ஆளுநர் (நியமனம்) லியோ பெலிக்ஸ் நிகழ்வினைத் தொடங்கி வைக்கின்றனர்.

ரோட்டரி மாவட்ட இணை செயலாளர் பாக்கியராஜ், சிறப்பு திட்டங்களுக்கான மாவட்ட செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகிக்கின்றனர். ரோட்டரி மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், ராமநாதன், ஆண்டனி பிரேம்குமார் மற்றும் துணை ஆளுநர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நிகழ்வில் 750க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொள்கின்றனர். சமூகத்தோடு ஒன்றிணைந்து செயல்படும் வகையில் அவர்களே பங்கேற்கும் கலை, விளையாட்டு மற்றும் தனித்திறன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அக்குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளும் நடக்கின்றன.

சிறப்புக் குழந்தைகளை ஊக்குவிக்க கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன. நிகழ்வில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெ.கார்த்திக் தலைமையில், ஷர்மிளா மாதவன், சிவகுமார், பிரசன்னா, ராதிகா ராமன், தாஸ் குமார் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

நிகழ்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு நிகழ்வுக்கான சேர்மன் சர்மிளா மாதவன் 94421 20834, ஒருங்கிணைப்பாளர் ராதிகா ராமன் 95979 01654 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement