பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

வாஷிங்டன்: பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' அமைப்பு பொறுப்பேற்றது.
பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
தற்போது, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாதியாகவும் சேர்க்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு ஐ.நா.வால் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



மேலும்
-
பண மூட்டை விவகாரம்; பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
-
சுவாமி தயானந்த சரஸ்வதியின் 'எய்ம் பார் சேவா' நடத்தும் இசை நிகழ்ச்சி
-
ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நரம்பு பாதிப்பு ; வெள்ளை மாளிகை சொல்வது இதுதான்!
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது