மாநகராட்சி முறைகேடு சிஸ்டம் சரியில்லையாம் சொல்கிறார் வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டிற்கு 'சிஸ்டம்' சரி இல்லாததே காரணம் என வெங்கடேசன் எம்.பி., தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாநகராட்சிக்கென 'அர்பன் ட்ரீ' என ஒரே போர்ட்டல் உள்ளதால் பல முறைகேடுகள் நடக்கின்றன.

வங்கிப் பரிவர்த்தனையில் கணக்கு வைத்திருப்பவருக்கு ஓ.டி.பி., வரும் நடைமுறை இதில் இல்லை.

இதனால் கமிஷனரின் 'பாஸ்வேர்ட்' தவறாக பயன்படுகிறது. இதுவே இப்பிரச்னைக்கு காரணம்.கீழ்மட்ட அதிகாரிகள் உதவியின்றி உயர் அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது.

சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஊழல் குறித்து தி.மு.க.,வினரும், தி.மு.க., ஊழல் குறித்து அ.தி.மு.க.,வும் கண்டுகொள்ளக் கூடாது என மறைமுக புரிதலுடன் அதிகாரிகள், அரசியல்வாதிகள் நடக்கின்றனர்.

கடந்த ஆட்சியில் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட ஊழல் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.கீழடி நாகரிகம்:கீழடி நாக ரிகம் கி.மு. 8 - கி.மு. 5ம் நுாற்றாண்டிற்கு இடைப்பட்டது என்பது அமர்நாத் ராமகிருஷ்ணனின் கூற்று. இதை ஏற்றால் நகர நாகரிகம் தென்னிந்தியாவில் இருந்து துவங்குவதாக அமையும். எனவே அதை நிராகரிக்கின்றனர். இப்பகுதியில் மேற்கொண்டு அகழாய்வு அவசியமில்லை எனக்கூறி பாதியில் வெளியேறிய ஸ்ரீராமனை வைத்து, தற்போது அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இது தமிழக விரோத நடவடிக்கை. இவ்வாறு கூறினார்.

Advertisement