ஆதித்யா மேலாண்மை கல்லுாரி முதலாமாண்டு துவக்க விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 2025---2026ம் கல்வியாண்டுக்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
ஆதித்யா கல்லுாரியின் தாளாளர் அசோக் ஆனந்த் தலைமை தாங்கி, பேசுகையில், கல்விதான் மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்று, வளர்த்து செல்லும், கல்வியோடு பிற திறமைகளையும் மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று, கல்லுாரியில் டேலி, டாசி, மற்றும் எச்.சி.எல்.டெக்.,ன் மைனர் பட்டம், மாணவர்களுக்கு சேர்த்து கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியோடு மன தைரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆதித்யா கல்லுாரி நவீன காலத்திற்கு ஏற்ப உயர்கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திர தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ், விஷ்வல் கம்யூனிகேஷன் பாடங்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது.
இளங்கலை வணிகவியல் பட்டத்தோடு ஒருங்கிணைந்த சி .ஏ., சி.எம்.ஏ., உள்ளிட்ட புரபஷனல் கல்விக்கான பாடங்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், யோகா, உடற்பயிற்சிகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!