அரசு பள்ளியை நிடி ஆயோக் உறுப்பினர் பார்வை

புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள மத்திய அரசின் நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் வீர்மானி, பெத்து செட்டிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியை நேற்று பார்வையிட்டார்.

அப்போது, பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் தமயந்தி ஜாக்குலின் அவரை, வரவேற்றார்.

மேலும், பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, ஊழியர்கள், தலைமை ஆசிரியர்களை பாராட்டினார். வட்டம் 1, பள்ளி துணை ஆய்வாளர் அனிதா உடனிருந்தார்.

Advertisement