புதுச்சேரியில் திரைப்பட விழா

புதுச்சேரி: புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சைஸ் அரங்கத்தில் திரைப்பட விழா நாளை துவங்குகிறது.

ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ராஜா அறிக்கை:

புதுச்சேரி அறிவியல் இயக்கம், அலையன்ஸ் பிரான்சைஸ் டி பாண்டிச்சேரியுடன் இணைந்து, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரைப்பட விழா நாளை 19ம் தேதி மற்றும் 20ம் தேதி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, புதுச்சேரியின் ரூ சப்ரென் தெருவில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் அரங்கத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

நாளை காலை 10:00 மணிக்கு துவக்கி விழா நடக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறை செயலர் முத்தம்மா, தகவல் மற்றும் விளம்பர துறை செயலர் முகமது அஹ்சன் அபித் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் சதீஷ் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியின் முதல் சிறப்பு காட்சியாக சர்வதேச ஆளவில் பாரட்டுகள் பெற்ற அனார் தானா என்ற படம் திரையிடப்படுகிறது. விழாவில் பங்கேற்க https://tinyurl.com/4rsdcvd4 என்ற இணைப்பை பயன்படுத்தி முன் பதிவு செய்துகொண்டு, சிறார்கள் நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறது.

Advertisement