ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு இரண்டு ஐ.ஏ.எஸ்., மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி அகாடமியிலும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அகாடமியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அங்கித் குமார், பூஜா ஆகியோரும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான விபு கிருஷ்ணா, வினய் குமார் கட்ஜ், சுருதி யரகட்டி ஆகியோரும் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் புதுச்சேரி அரசில் இணைந்து பணி செய்ய உள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.

Advertisement