மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின், மகப்பேறு பிரிவு மருத்துவமனையில் தினமும் நுாற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனைக்காவும், பிரசவத்திற்காகவும் வருகின்றனர்.

இம்மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற தாய்மார்கள் அனுமதிக்கப்பட்ட வார்டில், படுக்கைகள் கிழிந்து கிடந்தது. இதனால் பிரசவித்த பெண்கள் தங்கள் கை குழந்தையுடன் தரையில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

இதைத் தொடர்ந்து, மகப்பேறு மருத்துவமனையை கலெக்டர் பிரசாந்த் நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பவானி உடனிருந்தார்.

Advertisement