'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் துவங்கியது.
திருக்கோவிலுாரில் 1, 2, 3 வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.
தொடர்ந்து, பொதுமக்கள் திரளாக பங்கேற்று, 13 அரசு துறைகளைச் சேர்ந்த, 43 சேவைகள் குறிப்பாக விடுபட்ட மகளிர் உரிமைத் தொகை பெற புதிய விண்ணப்பங்களை வழங்குவது உள்ளிட்ட பயன்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முகாமில் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், தனித்துணை ஆட்சியர் சுமதி, நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா, நகராட்சி கமிஷனர் திவ்யா, பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தங்கம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!