ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கள்ளக்குறிச்சி: ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காமராஜரின் வாழ்க்கை வரலாறு, தமிழக முதல்வராக இருந்த போது செய்த சாதனைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தியது குறித்து விளக்கப்பட்டது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் பற்றி பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், சுழற்கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் பாபு மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement