புதிய தார்சாலை பணி கனியாமூரில் பூமி பூஜை

கள்ளக்குறிச்சி: கனியாமூரில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மூலதன முதலீட்டு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் கனியாமூரில் இருந்து ராயர்பாளையம் வரை 1.25 கி.மீ., தொலைவிற்கு புதிய தார் சாலை அமைக்க 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை நடந்தது.
ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி அடிக்கல்நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதேபோல், பங்காரத்தில் இருந்து உலகங்காத்தான் வரை 4 கி.மீ., தொலைவிற்கு 2.39 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை பணிகளும் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ், ஊராட்சி துணைத்தலைவர் சுகுணா வீராசாமி, தி.மு.க., கிளை செயலாளர்கள் ராஜிவ்காந்தி, ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!