மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் தினேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் விஜயகுமார், கண் மருத்துவர் காயத்ரி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட குழுவினர் 72 மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 41 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement