வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் தங்க நகை, 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், பெங்களூருவில் வீடு வாங்கி அங்கு வசித்து வருகிறார் பூட்டை கிராமத்தில் உள்ள வீட்டை உறவினர் வள்ளி பராமரித்து வருகிறார்.

மாதம் ஒருமுறை ராஜேந்திரன் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் வீட்டின் பின்பக்க கதவை உடைந்திருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வள்ளிக்கு தகவல் தெரிவித்தனர்.

வள்ளி சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 2 சவரன் நகைகள், 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

வள்ளி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement