கரும்பு லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கரும்பு லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரி அருகே அரியூர் பகுதியிலிருந்து கரும்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று, புதுச்சேரி - விழுப்புரம் நான்கு வழிச்சாலை வழியாக நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி, விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாசில் திரும்பி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை நோக்கி சென்றது.

விழுப்புரம் பைபாஸ் சாலை, செஞ்சி நெடுஞ்சாலை சந்திப்பு மேம்பாலத்தில் சென்ற போது, லாரியின் முன் டயர் திடீரென வெடித்தது. இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கரும்பு லோடு சாலையில் சிதறியது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் லாரியை அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement