மதுரை மாநகராட்சி முறைகேடு 2 கணினி ஆப்பரேட்டர்கள் கைது கைது எண்ணிக்கை 10 ஆக உயர்வு
மதுரை: மதுரை மாநராட்சியில் நடந்த ரூ. பல கோடி சொத்துவரி முறைகேடு புகார் தொடர்பாக கணினி புள்ளிவிபர குறிப்பாளர்கள் (ஏ.பி.,) இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்து வரியை குறைத்து நிர்ணயித்தது தொடர்பாக ரூ.பல கோடி முறைகேடு நடந்துள்ளதாக 2023, 2024ல் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது மத்திய குற்றப் பிரிவு உதவி கமிஷனர் வினோதினி தலைமையில் விசாரணை நடக்கிறது.
இதுவரை ஓய்வு உதவி கமிஷனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 5 தி.மு.க., மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில் கலெக்டர்கள் உட்பட 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 55 பேருக்கு இம்முறைகேட்டில் தொடர்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் கணினி புள்ளி விபரக் குறிப்பாளராக பணியாற்றிய ரவி, மண்டலம் 3 அலுவலகத்தில் பணியாற்றிய ↔தொடர்ச்சி 15ம் பக்கம்↔↔கருணாகரனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் இவர்கள் உட்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதான ரவி, மேயர் நேர்முக உதவியாளராக பணியாற்றிய உதவி பொறியாளர் பொன்மணியின் கணவர். இந்த முறைகேடு வெளியான நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்திற்கு டிரான்ஸ்பரில் சென்றார். இதுபோல் கருணாகரன், மண்டலம் 3 தலைவரின் தீவிர விசுவாசி.
இவர்கள் இருவரும் மாநகராட்சி அதிகாரிகள் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி வரியை குறைத்து நிர்ணயம் செய்த முறைகேட்டில் மூளையாக இருந்துள்ளனர். 2023 ம் ஆண்டிற்கு முன்பு இவர்கள் இதுபோன்ற முறைகேட்டை அரங்கேற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் யார் யார் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் விசாரணை தொடரும் என்றனர்.
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!