100 நோயாளிகளுக்கு ஒரு 'லேப் டெக்னீசியன்' ஆய்வுக்கூட நுட்பனர் சங்கம் கோரிக்கை
மதுரை:'அரசு மருத்துவமனைகளில் 100 நோயாளிகளுக்கு ஒரு லேப் டெக்னீசியனை நியமிக்க வேண்டும்,' என அகில இந்திய ஆய்வுக்கூட நுட்பனர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க மாநிலத் தலைவர் மரியதாஸ் கூறியதாவது: மருத்துவத் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலம் லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், நர்சிங், பார்மசி, லேப் டெக்னீசியன் மாணவர்களுக்கு லேப் டெக்னீசியன்கள் தான் ஆய்வக பயிற்சி அளிக்க வேண்டும். ரத்தம் வகைப்படுத்துதல், ஹீமோகுளோபின் கண்டறிதல், ரத்தப்பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகளை அனுபவம் உள்ளவர்களே கற்றுத்தர முடியும்.
அனுபவம் இல்லாத புதியவர்களை அரசு மருத்துவக் கல்லுாரி அல்லது மருத்துவமனைகளில் நியமித்தால் அவர்களால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாது. ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த லேப் டெக்னீசியன்களை அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு நியமிக்க வேண்டும். புதிதாக வருபவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நியமிக்க வேண்டும்.
மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் தினமும் 500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு ஒன்று அல்லது 2 லேப் டெக்னீசியன்களே உள்ளதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. 100 நோயாளிகளுக்கு ஒரு லேப் டெக்னீசியனை நியமிக்க வேண்டும்.
பரிசோதனை செய்வதற்கே நேரம் சரியாக இருப்பதால் பரிசோதனை முடிவுகளை கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் தனியாக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை நியமிக்க வேண்டும். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியனிடம் நேரடியாக மனு கொடுத்துள்ளோம் என்றார்.
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!