பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்

பழநி:பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை நேற்று துவங்கியது.

பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று ஆடி லட்சார்ச்சனை துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் ,ஜூலை 25ல் மீனாட்சி அம்மன் அலங்காரம், ஆக. 1ல் சந்தன காப்பு அலங்காரம், ஆக. 8ல் விசாலாட்சி அலங்காரம், ஆக. 15ல் மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடைபெற உள்ளது. இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

அ.கலையம்புத்துார், அக்ரஹாரம், கல்யாணியம்மன், கைலாசநாதர் சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை கணபதி பூஜை ருத்ராட்சத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement