மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்க்கும் தி.மு.க.,: அண்ணாமலை கிண்டல்

24

திருப்பூர்: ''கூவி, கூவி மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்த்து கொண்டு இருக்கிறார்கள்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமல தெரிவித்தார்.

திருப்பூரில் நிருபர்களை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, அண்ணாமலை கூறியதாவது: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் துயரமானது. 7 நாட்களாக குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் இருக்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பதற்கு இதே விட ஒரு சாட்சி இருக்காது.

பணபட்டுவாடா



இந்த சம்பவம் குறித்து இதுவரை முதல்வர் ஸ்டாலின் பேசவில்லை. முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் சொல்வார். மக்கள் தி.மு.க.,வால் போலீசார் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். மக்களை வலுகட்டாயமாக தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். தி.மு.க., உறுப்பினராக சேர வேண்டும். இதன் அடிப்படையில் தான் தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா செய்வோம். இப்படியா இரண்டரை கோடி பேரை சேர்ப்பார்கள். இது வெட்கக்கேடு.

மாம்பழம் விற்பது போல்...!



4 வருடங்கள் ஆன பிறகு, 5வது வருடத்தில் ஒரு கட்சி, 5முறை ஆட்சியில் இருந்து, 6வது முறையாக ஆட்சியில் இருக்கும் கட்சி கூவி, கூவி மாம்பழம் விற்பதை போல, கூவி கூவி ஆட்களை சேர்த்து கொண்டு இருக்கிறார்கள். இதிலே அவர்கள் நிச்சயமாக தோற்கப்போகிறார்கள் என்பது தெரிகிறது. தே.ஜ., கூட்டணி தான் ஜெயிக்க போகிறது. திருப்பூரில் காலேஜ் படிக்கும் பசங்க கஞ்சா அடிக்கின்றனர்.

கஞ்சா புழக்கம்



ரோட்டில் சண்டை போடுகின்றனர். திருப்பூரில் கஞ்சா புழக்கம் அதிகமாகி கல்லூரி மாணவர்கள் சண்டை போடுகின்றனர். தமிழகத்தில் எல்லா பகுதியிலும், ஒரு ஒரு நியூசும் நம்மளை ஷாக்கில் வைத்து இருக்கிறது. நாம் எல்லோரும் உறைந்து போய் நிற்கின்றோம். குறிப்பாக, நடுத்தர குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கு பயப்படுகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

சாரி மட்டும் தான்...!



திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement