தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு: இ.பி.எஸ்.,

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார் ஹோட்டல் அரங்கில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வணிகர்களுடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கலந்துரையாடினார்.
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணமாக மயிலாடுதுறை வந்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இன்று வைத்தீஸ்வரன்கோவிலில் விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், கட்டிட பொறியாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயிகளுக்கு நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, அதிகளவில் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்தது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் உரத்தட்டுப்பாடு இல்லை.
ஆனால் தற்போது உரத் தட்டுப்பாடு உள்ளது. 4 தடுப்பணைகள் அமைத்து உபரிநீர் தேக்க திட்டத்தை அறிவித்தோம். ஆனால் தி.மு.க., அரசு அதனை செயல்படுத்தவில்லை. தி.மு.க., ஆட்சியில் மணல் கொள்ளை நடக்கிறது. அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது. 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். ஆனால் எந்த திட்டமும் வந்ததாக தெரியவில்லை.
அ.தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ, அதனை செய்திருக்கிறோம். தி.மு.க.,வின் வேளாண் பட்ஜெட் என்பது ஏமாற்று வேலை. அதனால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை.
மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் மீனவர்க்ளுக்கான தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும். மீனவர்கள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். 2026-ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித்தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
-
ஆசிய பாட்மின்டன்: இந்தியா வெற்றி
-
பீஹாரில் ரோடு ஷோவில் விபத்து; வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோர் காயம்!
-
இந்திய வீராங்கனைக்கு அபராதம்
-
பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு