ஆயுதப்படை வீரர்களுக்கு ஏகே -203 ரைபிள்கள் : உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதம்

அமேதி : இந்திய ஆயுதப்படைகளுக்கு கலாஷ்நிகோவ் வகையின் அதிநவீன ஏகே 203 ரைபிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ரைபிள்கள் மூலம் ஒரு நிமிடத்தில் 700 சுற்றுகள் சுட முடிவதுடன், 800 மீ., தூரம் வரை தோட்டாக்கள் பாயும்.
இந்தியா ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஐஆர்ஆர்பிஎல்வ) கூட்டு தயாரிப்பில், உ.பி., அமேதி இந்த ரைபிள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரைபிளுக்கு ஏகே -203 'ஷெர்' என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
ரூ.5,200 கோடி மதிப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 6 லட்சம் ரைபிள்களை ஆயுதப்படைக்கு வழங்க உள்ளன.
இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் தலைவர் மேஜனர் ஜெனரல் எஸ்கே ஷர்மா கூறியதாவது: இந்த விநியோகம் 2030ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். இதுவரை 48 ஆயிரம் ரைபிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் 7 ஆயிரம் ரைபிள்களும், இந்தாண்டு டிச.,க்குள் 15 ஆயிரம் ரைபிள்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான், சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு இந்த ரைபிள்கள் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும்
-
டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு
-
உக்ரைன் உடனான போர்; ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்
-
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு: இ.பி.எஸ்.,
-
பந்தலுாருக்கு சிறப்பு சேர்க்கும் சேற்று கால்பந்து போட்டி
-
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார்: கண்டறிந்த உளவுத்துறை