3 நாட்களில் பொற்கோவிலுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல்: இன்ஜினியர் கைது

2

அமிர்தசரஸ்; அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.



இதுபற்றிய விவரம் வருமாறு:


ஜூலை 14ம் தேதி முதல் ஷிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைமையகம் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு மிரட்டல் இ மெயில்கள் வந்துள்ளன. மொத்தம் 6 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.


ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போது களத்தில் இறங்கும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் சோதனைக்குப் பின்னர் அவை அனைத்தும் மிரட்டல்களே என்பதை உறுதி செய்தனர்.


பொற்கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிய போலீசார், மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை கண்டறியும் பணியில் இறங்கினர். புலன் விசாரணையில் மிரட்டல் விடுத்தது பரிதாபாதில் வசிக்கும் சுபம் துபே என்பதை அடையாளம் கண்டனர். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினினியர் ஆவார்.


இதுகுறித்து காவல்துறை கமிஷனர் குர்பிரீத் சிங் புல்லர் பேசுகையில், சுபம் துபே விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரின் மடிக்கணினிகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.


இந்த விசாரணையில் மத்திய புலனாய்வு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. கைது செய்யப்பட்டவருக்கு பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார்.

Advertisement