கோவையில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகள் 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

5

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார்.


கடந்த 2019, நவம்பரில் கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பார்க்கில், 16 வயது சிறுமி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற ஏழு பேர் கும்பல், இருவரையும் தாக்கினர். பின்னர், சிறுமியை பார்க்கில் மறைவான இடத்துக்கு இழுத்து சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.


போலீசார் விசாரித்து மணிகண்டன். கார்த்திக், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி. கார்த்திகேயன் மற்றும் மணிகண்டன்(வேறொருவர்) ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். கோவை முதன்மை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில் இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.


இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement