உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி



கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மக்கள் குடும்ப நலத்துறை, மாவட்ட சுகாதார பணிகள் சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.


உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஜீவா நர்சிங் கல்லூரி மாணவியர் எடுத்துக்கொண்டனர். முன்னதாக, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஞானமீனாட்சி, குடும்ப நல துணை இயக்குனர் பாரதி, புள்ளி விபர உதவியாளர் குமரேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement