அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பண்ருட்டி : பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா, அ.தி.மு.க., மகளிரணி மாநில துணை செயலர். கடந்த 2016 - - 2021 வரை பண்ருட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம், கடந்த 2011 -- 2016 வரை பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தார்.
இவர்கள் இருவரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக, கடந்த 2024ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலுார் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையில் மூன்று கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று, பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா, பன்னீர்செல்வம் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா திடீரென மயக்கம் அடைந்ததால், கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
இந்திய விமானங்கள் ஆக.24 வரை வான்வெளியில் பறக்கக்கூடாது; பாக்., தடை நீட்டிப்பு
-
இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
-
செல்லியம்மன் தேர் திருவிழா
-
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு
-
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
-
இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்