காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
காமராஜர் குறித்து பல்வேறு விதமாக அவதுாறு பேசிய தி.மு.க.,வினர், தற்போதும் அவர் பற்றி அவதுாறு கூறினாலும், காங்கிரஸ் கட்சியினர், எதுவும் பேசவில்லை. அந்த அளவுக்கு, தமிழகத்தில் காங்., தலைவர்கள் செயலிழந்து கூட்டணியில் நீடிக்கும் அவல நிலையில், ஒட்டிக்கொண்டு உள்ளனர்.
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஏழு நாட்கள் கடந்தும் சரியான விசாரணை செய்யவில்லை; முதல்வர் ஸ்டாலின், வாய் திறக்கவில்லை. 'சாரி' என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு போகிறார். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு இதுவே சாட்சி. தி.மு.க., முகாமில் இணைந்தால் மட்டுமே 1,000 ரூபாய் உரிமைத்தொகை என பகிரங்கமாக தெரிவித்து வலுக்கட்டாயமாக மக்களை கட்சியில் சேர்த்து வருகின்றனர்.
இப்படித்தான் வரும் சட்டசபை தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்வோம் என, பல்லடத்தில் தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். ஐந்து முறை ஆட்சியில் இருந்த கட்சி, ஆறாவது முறையாக ஆட்சிக்கு வர, மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களை கட்சிக்கு சேர்த்து வருகின்றனர்.
அண்ணாமலை,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,