செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை கொலை செய்த மனைவி கைது

புதுக்கோட்டை:மது போதையில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை, அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன், 54; வி.சி., கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் டிரைவராகவும் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம், சண்முகநாதன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, மனைவி தனலட்சுமி பனையப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சண்முகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், சண்முகநாதன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. தனலட்சுமி, 45, மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, விசாரணை நடத்தினர்.

இதில், தனலட்சுமிக்கு, சண்முகநாதன் மது அருந்தி தினமும் செக்ஸ் டார்ச்சர் மற்றும் உடல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததும், ஆத்திரமடைந்த தனலட்சுமி அவரை கம்பியால் அடித்து கொலை செய்து, இறந்து கிடப்பதாக நாடகமாடி போலீசில் புகார் செய்ததும் தெரியவந்தது.

தனலட்சுமியை பனையப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement