சிலை வளாகத்தில் நுாலகம் அமைக்க ஆட்சேபித்து மனு

ஈரோடு, :சிவகிரி சுதந்திர போராட்ட தியாகி குமரன் பேரவை துரைசாமி மற்றும் சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகம், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
சிவகிரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் உருவச்சிலையை, வெண்கல சிலையாக அமைத்து தருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். சிலை வளாகத்துக்குள் நுாலகம் அமைக்க எம்.பி., பிரகாஷ் கூறியுள்ளார். அவ்வளாகம் மிக குறுகியது. படிப்பகம் அமைத்தால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். அருகே அண்ணா கலையரங்கில் அடிக்கடி அரசியல், பொது நிகழ்வு நடக்கும். படிப்பகம் அமைந்தால் படிப்போருக்கு இடையூறு ஏற்படும்.
கோவிலும் உள்ளதால் திருவிழா உட்பட பிற சமயங்களிலும் ஒலிபெருக்கி, நிகழ்ச்சிகளால் படிக்க இயலாது. சிலை வளாகத்தின் பின்புறம் ஏழைகள் கடை நடத்துவது சிரமமாகும். எனவே டவுன் பஞ்.,க்கு சொந்தமான விசாலமான வேறிடத்தில் நுாலகம் அமைத்தால் பயனுடையதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement