வாழ்நாள் சான்று பதிவு ஓய்வூதியர் வலியுறுத்தல்



ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட அனைத்து அரசு துறை ஓய்வூதியர் சங்க செயலர் பன்னீர்செல்வம், ஹரிதாஸ், சங்கரன் உட்பட பலர் மனு வழங்கினர்.


அதில், ஓய்வூதியர் வாழ்நாள் சான்று வழங்கும்போது, அதை பென்ஷன் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மருத்துவ காப்பீட்டில் மருத்துவ செலவுகளை திரும்ப பெறுதல், பண பலன்கள் நிலுவை, குடும்ப நல நிதி, திருத்திய பணக்கொடை வழங்குதல் தொடர்பாக, 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை மூலம் விசாரித்து தீர்வு காண உத்தரவிடப்பட்டது.

Advertisement