ஆசிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் காலிறுதியில் இந்திய அணி, ஜப்பானிடம் தோல்வியடைந்தது.

இந்தோனேஷியாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (கலப்பு அணி) தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா 9-11 என ஜப்பானின் யூசுனோவிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பார்கவ் ராம், விஸ்வா தேஜ் ஜோடி 13-10 என ஜப்பானின் கசூமா கவானோ, ஷுஜி சவாடா ஜோடியை வென்றது. பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் வென்னலா, ரேஷிகா ஜோடி 11-5 என அன்ரி யமனகா, சோனா யோனேமோட்டோ ஜோடியை (ஜப்பான்) வீழ்த்தியது.
முடிவில் இந்தியா 104-110 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement