புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி
புதுச்சேரி : புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.88 ஆயிரம் இழந்துள்ளது.
குயவர்பாளையத்தை சேர்ந்த ஆண் நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் ரூ.40 ஆயிரத்து 200 முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபரை, தொடர்பு கொண்ட மர்மநபர் அவரின் உறவினர் பெயரிலான வாட்ஸ் ஆப் மூலம் அவசர தேவைக்கு பணம் தேவை என கேட்டுள்ளார்.இதை நம்பி, மர்மநபருக்கு 40 ஆயிரம் அனுப்பிவிட்டு, உறவினரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவரது வாட்ஸ் ஆப் எண் ஹாக் செய்து, பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் 8 ஆயிரத்து 748 என 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 88 ஆயிரத்து 948 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 2வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்!
-
ரயில்வே பாதுகாப்பு தனியார் வசம் போகுதா ?
-
ராஜஸ்தானில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு
-
ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
-
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை
-
ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி