மின் டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பி திருட்டு

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் 2 டிரான்ஸ்பமார்மர்களில் 652 லிட்டர் ஆயில், 420 கிலோ காப்பர் கம்பியை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் கிராம மின் டிரான்ஸ்பமார்மரில், 205 லிட்டர் ஆயில், 120 கிலோ காப்பர் கம்பியும், வெங்கட்டாம்பேட்டை கிராம மின் டிரான்ஸ்பார்மரில் 450 லிட்டர் ஆயில் மற்றும் 300 கிலோ காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இளமின் பொறியாளர் கருணாநிதி அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ஆயில், காப்பர் கம்பி திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement