வீட்டில் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

அரியாங்குப்பம்: வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 65. இவர் கடந்த 20ம் தேதி, தனது மருமகள் சுதாவுடன், அருகில் உள்ள மார்கெட்டுக்கு பழ வியாபாரம் செய்ய சென்றனர்.

வீட்டில் அவரது மகன் படுத்திருந்தார்.

பின், வீட்டிற்கு வந்தபோது, வீட்டு முன்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்க்கும் போது, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயின் மற்றும் மருமகளின் நகைகள் காணாமல் போயிருந்தது. புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement