சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்

புதுடில்லி : 2025 சுதந்திர தினத்தினை முன்னிட்டு இந்திய ரயில்வே துறை, ஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைந்து பாரத் கவுரவ் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா ரயில் சுதந்திர போரட்ட தியாகிகளை நினைவு கூறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 அன்று டில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அகமதாபாத் சென்றடைந்து, பின் அங்குள்ள சபர்மதி ஆஸ்ரமம், சபர்மதி ஆறு, பிரசித்தி பெற்ற சர்தார் வல்லபாய் படேல் சிலை, ஸ்டேசிவ் ஆப் யுனிட்டி அழைத்து செல்லப்பட உள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அவுரங்காபாத் ஆஹாகான் பேலஸ், மற்றும் பல்வேறு சுதந்திர போராட்ட நினைவு சின்னங்களுக்கும் அழைத்து செல்லப்படும். மேலும் இதனுடன் பயணிகளுக்கு 2 ஆன்மிக ஸ்தலங்களையும் இணைத்துள்ளனர். பிமாசங்கர் ஜோதிர்லிங்கா, ஸ்ரீ கிரிஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கா ஸ்தலங்களையும் அழைத்து செல்லப்பட உள்ளனர். 10 நாட்கள் பயணமாக அழைத்து செல்லப்படும் இந்த செகுசு ரயிலில் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, ரயில் செலவு அனைத்தும் உள்ளடங்கும்.
இதன் பயண தொகையாக 3ம் வகுப்பு ஏசி கட்டணமாக 71 ஆயிரமும், 2ம் வகுப்பு ஏசி கட்டணமாக 81 ஆயிரம் மற்றும் முதல் வகுப்பு கட்டணமாக 94 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறியும் வண்ணம் உத்தர்காண்ட் மாநில சார் தாம் யாத்ரா என அழைக்கப்படும் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் தமிழ்நாடு யாத்திரையும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த ரயில் பயணத்தில் அழைத்து செல்ல உள்ளனர்.
மேலும்
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி விழா
-
புற்றுநோய் அதிநவீன சிகிச்சை மையத்துக்கு ரூ.25 கோடியில் உபகரணம்! அமெரிக்காவில் இருந்து திருப்பூருக்கு வந்தது
-
அறிவித்தபடி ஊதியம் வழங்க கோரிக்கை
-
இடப்பிரச்னையில் கொலை 2 சகோதரர்களுக்கு 'ஆயுள்'
-
அங்கன்வாடி வளாகம் சுத்தமானது!
-
சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.80 கோடி ஒதுக்கீடு