அஞ்சல் துறை பணிகளில் புது தொழில்நுட்பம் அறிமுகம்

புதுச்சேரி : அஞ்சல்துறையை மேற்படுத்தும் பணி நடக்கவுள்ளதால் வரும் 4ம் தேதி அனைத்து சேவை பணிகள் நடக்காது என, அஞ்சல்துறை அறிவித்தது.

புதுச்சேரி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் 2.0 வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, வரும் 4ம் தேதி சேவை இல்லாத நாளாக அறிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் எந்த சேவையும் நடக்காது. புதிய தொழில் நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்ய இந்த இடை நிறுத்தம் செய்யப்படுகிறது. அனைவருக்கும் துரித டிஜிட்டல் சேவை பெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் சேவை இல்லா நாளை கருதி, தங்கள் அஞ்சல் சேவைகளை முன் கூட்டியே பெற கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement