திவ்யா-ஹம்பி மீண்டும் 'டிரா': உலக கோப்பை செஸ் பைனலில்

பதுமி: திவ்யா, -ஹம்பி மோதிய உலக கோப்பை செஸ் பைனலின் 2வது போட்டி 'டிரா' ஆனது.
ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு இந்தியாவின் கொனேரு ஹம்பி, திவ்யா முன்னேறி வரலாறு படைத்தனர். இரண்டு போட்டிகள் கொண்ட பைனலின் முதல் போட்டி 'டிரா' ஆனது.
இரண்டாவது போட்டியில் திவ்யா, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். ஹம்பி, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தினர். விறுவிறுப்பான இப்போட்டி 34வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இதனையடுத்து ஸ்கோர் 1.0 - 1.0 என மீண்டும் சமநிலையில் உள்ளது. 'டை-பிரேக்கர்' (ஜூலை 28) முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
-
திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி புஷ்ப சேவையில் அருள்பாலிப்பு
-
யு.டி.சி., அசிஸ்டண்ட் பதவி உயர்வு தேர்வு அரசு ஊழியர்கள் ஆர்வம்
-
நீட் அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் விண்ணப்பிக்காதவர்களுக்கும் வாய்ப்பு
-
காரைக்காலில் கால்நடை கண்காட்சி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
Advertisement
Advertisement