யு.டி.சி., அசிஸ்டண்ட் பதவி உயர்வு தேர்வு அரசு ஊழியர்கள் ஆர்வம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டி தேர்வு நடத்தி, நிர்வாக சீர்திருத்த துறை நிரப்பி வருகின்றது. இதுமட்டுமின்றி காலியிடங்களை துறை ரீதியான தேர்வுகளை நடத்தி பதவி உயர்வு மூலவும் நிரப்பி வருகின்றது.

அதன்படி எல்.டி.சி.,யில் இருந்து யு.டி.சி., பதவி உயர்வு மற்றும் யு.டி.சி.,யில் இருந்து அசிஸ்டண்ட் பதவி உயர்வு அளிப்பதற்கான துறை ரீதியான தேர்வு கலவை கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை, மாலையில் இருவேளையாக நடந்தது.

யு.டி.சி., பதவி உயர்வு தேர்வினை 156 பேரும், அசிஸ்டண்ட் பதவி உயர்வு தேர்வினை 7 பேரும் எழுதினர். தேர்வு மையத்தினை அரசு செயலர் கேசவன், சார்பு செயலர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நிர்வாக சீர்திருத்த துறை அதிகாரிகள் கூறும்போது, துறை ரீதியான தேர்வு விடைத்தாள் ஒரு மாதத்திற் குள் முழுவதுமாக திருத்தி ரிசல்ட் வெளியிடப்படும் என்றனர்.

யு.டி.சி., பணியிடத்தில் 19 பணியிடங்கள், அசிஸ்டண்ட்டில் 57 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தான் பதவி உயர்வுக்கான துறை ரீதியான தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

அசிஸ்டண்ட் பணியிடத் தினை பொருத்தவரை, மொத்தமுள்ள 57 இடங்கள், பொது-47, எஸ்.சி.,-9, எஸ்.டி., -1 என்ற அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்கள் உள்ஒதுக்கீடும் உண்டு.

யு.டி.சி.,யில் பணியிடத்தினை பொருத்தவரை மொத்தமுள்ள 19 பணியிடங்கள் பொது-17, எஸ்.சி.,-1 என்ற அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 1 பணியிடம் உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement