நீட் அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் விண்ணப்பிக்காதவர்களுக்கும் வாய்ப்பு

புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக் படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு புதிதாக விண்ணப்பிக்கலாம்.

நீட் அல்லாத படிப்புகளில் சேர 15,993 பேர் விண்ணப்பிக்க இ-மெயி ல் கொடுத்து பதிவு செய்திருந்தனர். இதில் 13,526 பேர் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பித்துள்ளனர்.

கலை அறிவியல் படிப்பிற்கு 3227, தொழில் படிப்பிற்கு 6388 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலை அறிவியல் தொழில் படிப்புகளுக்கு சேர்த்து 3911 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு 5200 பேர், பி.பார்ம் படிப்பிற்கு 4,586, அக்ரி 2673, பி.டெக்., 6344, சட்டம் 1469, டி.ஐ.பி. , 1644, டி.ஏ.என்.எம்.,971, பி.வி.ஓ.சி., 1099 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ரீதியாக பார்க்கும்போது புதுச்சேரி 11071, பிற மாநிலங்களில் இருந்து 2448, என்.ஆர்.ஐ., 2 என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு 6 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்த சென்டாக் தற்போது இப்படிப்புகளுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது. நாளை 29 ம்தேதி மாலை 5 மணிக்குள் படிப்பு, கல்லுாரிகளை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது. பிளஸ்2 துணை தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இதுவரை நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement