இந்தியாவில் வின்பாஸ்ட் முதல் கார் ஷோரூம் குஜராத்தில் துவக்கம்

@block_B@ வின்பாஸ்ட் கார் ஷோரூம் குஜராத்தில் துவக்கம்block_B
மி ன்சார கார் உற்பத்தியாளரான வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம், குஜராத்தில் தன் முதல் கார் ஷோரூமை துவக்கியுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் தமிழகத்தின் துாத்துக்குடியில் அதன் உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது.
இந்த ஆலையை துவங்குவதற்கு முன்பாக, நாடு முழுதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 27க்கும் மேற்பட்ட நகரங்களில் 35 டீலர்ஷிப்களை அறிமுகப்படுத்த இலக்கு வைத்துள்ளது.
இம்மாதம் 15ம் தேதி, நிறுவனத்தின் பிரீமியம் மின்சார எஸ்.யு.வி., கார் மாடல்களான வி.எப்.6 மற்றும் வி.எப்.7க்கு முன்பதிவுகளை அதிகாரபூர்வமாக துவக்கியுள்ளது.
இவ்வகை கார்களை காட்சிப்படுத்துவதற்கு வசதியாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பிப்லாடில் 3,000 சதுர அடி பரப்பளவில் தன் முதல் ஷோரூமை திறந்துள்ளது.

மேலும்
-
கால்நடைகள் திருட்டு; நடவடிக்கை இல்லை போலீஸ் மீது விவசாயிகள் அதிருப்தி
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை; சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
துறை அமைச்சரும் பார்த்தாச்சு... 3 ஆண்டுகளும் போயாச்சு... குடியிருப்புகளுக்கு விமோசனம் இல்லை
-
தேஜஸ்வின் தேசிய சாதனை
-
1.50 லட்சம் பேர் 2 வங்கிகளில் பயிர் கடன் வாங்கியது அம்பலம்