கால்நடைகள் திருட்டு; நடவடிக்கை இல்லை போலீஸ் மீது விவசாயிகள் அதிருப்தி
விவசாய உபகரணங்கள், ஆடு, மாடுகள் திருடு போவது குறித்து போலீசில் புகார் அளித்தால் முறையாக நடவடிக்கை எடுக்காததால் போலீசார் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் சில மாதங்களுக்கு முன் சாலாமேடு, வழுதரெட்டி பகுதியில் வீடு, நிலங்களில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்த மாடுகள் நள்ளிரவில் திருடு போனது. மினி டெம்போ வைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மேலும், திண்டிவனம் பகுதிகளிலும் வீடு, நிலத்தில் கட்டி வைத்திருந்த ஆடு, மாடுகள் திருடு போனது. இதே போன்று மின் மோட்டார், ஸ்டார்ட்டர், மின் ஒயர்கள் என திருட்டுகள் குறித்து போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.
போலீசில் புகார் அளித்தால் வழக்கு பதியாமல் கண்டுபிடித்து தருகிறோம் என கூறி அனுப்பி விடுகின்றனர். ஆனால், அடுத்த சில தினங்களில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வார சந்தைகளில் திருட்டு கால் நடைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் புலம்புவதுடன் போலீசார் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும்
-
சிருங்கேரியில் ஸ்ரீ சன்னிதானத்தின் வர்தந்தி உற்சவம்
-
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு
-
கடலுார் சுமங்கலி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை