அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் ஆவணமில்லா டிராக்டர் பறிமுதல்

கரூர்; கரூரில், அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் அறக்கட்டளை சார்பில், மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டிராக்டரை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி., என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். இவர், 2016 - 2021 முதல் கரூரில், கோவை சாலை, ஜவஹர் பஜார் உட்பட பல இடங்களில், 'கானகத்திற்குள் கரூர்' என்ற பெயரில், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

ஓரளவு வளர்ந்துள்ள மரங்களுக்கு, அறக்கட்டளை சார்பில், டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. டிராக்டருக்கு, உரிய ஆவணங்கள் இல்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து, மரங்களுக்கு நேற்று டிராக்டர் மூலம், ஆண்டாங்கோவில் புதுாரை சேர்ந்த பெருமாள், 54, என்பவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கரூர் டவுன் போலீசார் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி, டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement