12 வயது சிறுமி பலாத்காரம்; இரு வாலிபர்களுக்கு 'கம்பி'
திருச்செந்துார்; சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் இரு வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
துாத் துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, 12 வயது சிறுமி அப்பகுதி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. ஆசிரியைகள் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
இதில், சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சில மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை இரண்டு வாலிபர்கள் தனித்தனியே மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, தன் தாயுடன் திருச்செந்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த அமலிநகர் பியோ காலனியை சேர்ந்த ரிசோ, 24, தெற்கு புதுதெருவை சேர்ந்த டி ராவிட், 24, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும்
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபாவில் விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் 'ஆபரேஷன் மகாதேவ்'
-
பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!