பழநி கோயில் பிரகாரத்தில் 'ஓம் முருகா' மின் விளக்கு

பழநி; பழநி முருகன் கோயிலில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தில் அமைந்துள்ளது போல் கிழக்கு வெளிப்பிரகாரத்திலும் 'ஓம் முருகா' நியான் மின் விளக்கு பொருத்தப் பட்டுள்ளது.
பழநி முருகன் கோயில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் வேலுடன் கூடிய 'ஓம் முருகா' எனும் எழுத்துக்களைக் கொண்ட நியான் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, கோயமுத்துார் பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு இரவு நேரத்தில் மலை மீது தெரியும்.
ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இதே போன்ற பெரிய 'ஓம் முருகா' எழுத்துக்களை உடைய நியான் மின்விளக்கு கிழக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் பகுதியில் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கை கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் வெகு தொலைவில் இருந்தே கண்டு ரசிக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் 'ஆபரேஷன் மகாதேவ்'
-
பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!
Advertisement
Advertisement