நீலகிரியில் நிரம்பிய அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்

ஊட்டி; நீலகிரி மாவட்டம், ஊட்டி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீரோடைகளில் வழக்கத்தை விட நீர் வரத்து அதிகரித்துள்ளது. குந்தா, பைக்காரா நீர் மின் வட்டத்திற்கு உட்பட்ட நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், 13 அணைகளில், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.
உபரி நீர் வெளியேற்றம் அப்பர்பவானி, 210 அடி; குந்தா, 89 அடி; அவலாஞ்சி, 171 அடி; பைக்காரா, 100 அடி; முக்கூர்த்தி, 18 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதில், அவலாஞ்சியில், இரண்டு மதகுகளில் வினாடிக்கு, தலா, 400 கன அடி; குந்தா அணையில், இரண்டு மதகுகளில், வினாடிக்கு, 250 கன அடி; முக்கூர்த்தி அணையில் வினாடிக்கு, 200 கன அடி; பைக்காரவில், மூன்று மதகுகளில், 300 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பிற அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'பரவலாக பெய்து வரும் மழைக்கு குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, பில்லுார் உள்ளிட்ட அணைகள் இரண்டாவது நாளாக திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) கிளன்மார்கன், பைக்காரா, மூக்கூர்த்தி அணைகள் திறக்கப்பட்டுள்ளது.தேவைக்கேற்ப நீர் இருப்பில் இருப்பதால் தடையின்றி மின் உற்பத்தி நடந்து வருகிறது,'என்றனர்.
மேலும்
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபாவில் விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் 'ஆபரேஷன் மகாதேவ்'
-
பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!