முன் மழலையர் கற்றல் வள மையம் திறப்பு

வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் முன் மழலையர் கற்றல் வளமையம் திறப்பு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் தலைமை தாங்கி, முன்மழலையர் கற்றல் வளமையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.

விழாவில் நான்காம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் திருவரசன் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். ஆசிரியர் அலெக்சாண்டர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குப்பம்மாள், சங்கீதா, ரேகா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா ஆகியோர் செய்தனர்.மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement