மின்சாரம் திருடியவருக்கு ரூ.1.76 லட்சம் அபராதம்
சங்ககிரி:சங்ககிரி அருகே மின்சாரம் திருடியவருக்கு, 1.76 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வால்காடு உள்ளது. அங்குள்ள மணி என்பவரது விவசாய நிலத்தில், செட்டிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர், மண் எடுத்து மணலாக மாற்ற, திருட்டுத்தனமாக மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடியுள்ளார். இதுகுறித்து விவசாயிகள், நேற்று முன்தினம், மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
தேவூர் மின் வாரிய உதவி பொறியாளர் கதிரேசன் விசாரித்து, திருடப்பட்ட மின்சாரத்தை கணக்கிட்டு, 1.76 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். தொடர்ந்து அந்த பணத்தை உடனே கட்டாவிட்டால், போலீசில் புகார் கொடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து, 12,000 ரூபாயை கட்டிய சக்திவேல், மீதி தொகையை, மூன்று நாளில் கட்டுவதாக உறுதி அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு * நாக்பூர் விமான நிலையத்தில்...
-
ஸ்குவாஷ்: இந்தியா வெண்கலம்
-
காலிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் ஓபன் பாட்மின்டனில்...
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
Advertisement
Advertisement