அரையிறுதியில் இந்திய அணி * உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...

கெய்ரோ: எகிப்தில் உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய ஆண்கள் அணி, முதல் 3 போட்டியில் தென் ஆப்ரிக்கா (3-0), ஜெர்மனியை (3-0), ஜப்பானை (2-1) சாய்த்து, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று, 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியது. இதில் கனடாவை 2-0 என வென்றது. அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியா, தென் கொரியா மோதின.
முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் யூஷா நபீஸ், 11-5, 11-5, 11-9 என வென்றார். அடுத்த போட்டியில் இந்தியாவின் சந்தேஷ் 4-11, 4-11, 4-11 என தோல்வியடைய, ஸ்கோர் 1-1 என ஆனது. மூன்றாவது போட்டியில் அரிஹந்த், 11-7, 11-13, 11-8, 11-7 என போராடி வென்றார். முடிவில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்று, 13 ஆண்டுக்குப் பின் இத்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று அமெரிக்காவை சந்திக்க உள்ளது.
இந்திய பெண்கள் அணி, காலிறுதியில் வலிமையான எகிப்தை எதிர்கொண்டது. இந்திய வீராங்கனைகள் அனிகா, உன்னதி, நவ்யா ஏமாற்ற, 0-3 என தோல்வியடைந்தது.
மேலும்
-
கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து
-
அயர்லாந்தில் இந்தியர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மீண்டும் ஒரு கொடூர சம்பவம்!
-
காங்கிரஸ் பிரமுகரின் ரூ.200 கோடி மோசடி: அமலாக்கத்துறை அந்தமானில் முதல் முறை சோதனை
-
அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி
-
செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாகிஸ்தான் அதிர்ச்சி
-
யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் கவினின் தோழி: திருமாவளவன் சந்தேகம்