அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி

52

சென்னை: '' அரசியலில் எதுவும் நடக்கலாம்,'' என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.


@3br@முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன் பிறகு, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் ஓ.பி.எஸ்., தரப்பு அறிவித்தது.


Tamil News
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் ஓபிஎஸ் மீண்டும் உடன் இருந்தார். அவருடன், மகன் ரவிந்திரநாத், முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களை, துணை முதல்வர் உதயநிதி வாசல் வரை வந்து வரவேற்றார்.


அரசியலில் எதுவும் நடக்கலாம்: ஓபிஎஸ் பேட்டி


@block_B@முதல்வருடன் அரை மணி நேரம் சந்தித்து பேசியபின் ஓபிஎஸ் கூறியதாவது: மரியாதை நிமித்தமாகவே முதல்வரை சந்தித்தேன். மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ள அவரிடம் உடல் நலம் விசாரித்தேன். கருணாநிதி மூத்த மகன் முத்து மறைவுக்கு ஆறுதல் கூறினேன். ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரிகளும் இல்லை.

அரசியலில் எனக்கென்று சுய மரியாதை உண்டு. மத்திய அரசு தமிழகத்துக்கு கல்வி நிதி தராததால் எனக்கு வருத்தம். நடிகர் விஜயுடன் நானும் பேசவில்லை; அவரும் பேசவில்லை. பாஜ உடன் கூட்டணி அமைத்துள்ள இபிஎஸ்க்கு வாழ்த்துக்கள்


block_B



இன்று காலை முதல்வர் ஸ்டாலினை, தேமுதிகவின் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement